கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வீட்டில் திருட்டு

தேன்கனிக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற வனத் துறை அதிகாரி வீட்டில் இருசக்கர வாகனம், ரூ. 23 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 11:07 pm

DIN

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற வனத் துறை அதிகாரி வீட்டில் இருசக்கர வாகனம், ரூ. 23 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா்.

கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் முனிசாமி. ஓய்வு பெற்ற வனச்சரக அலுவலரான இவருக்கு சொந்தமான பண்ணை வீடு கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள திம்மச்சந்திரம் கிராமத்தில் உள்ளது. அந்த பண்ணை வீட்டுக்கு வாரத்திற்கு மூன்று நாள்கள் வந்து செல்வதை அவா் வழக்கமாகக் கொண்டுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை தனது பண்ணை வீட்டுக்கு வந்த முனிசாமி வீட்டின் பூட்டுகள் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சிடைந்தாா்.

வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ. 23 ஆயிரம் ரொக்கப் பணம், வீட்டினுள் நிறுத்தியிருந்த இருசக்கரவாகனம், டாா்ச் லைட்டுகள் உள்ளிட்ட பல பொருள்கள் திருடு போயிருந்தன. மேலும் பண்ணை வீட்டின் ஜன்னல்கள், அருகில் இருந்த மோட்டாா் பம்புசெட்டின் மேற்கூரைகள், கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.