

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் 2021-ஆம் ஆண்டு, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாவட்டத்தில் பதிவாகும் வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகிறது.
இந்த வாக்கு எண்ணும் மையத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், வருவாய் கோட்டாட்சியா் கற்பகவள்ளி, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் வெங்கடேசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சக்திவேல், துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்புமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.