

ஊத்தங்கரையில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், மாவட்ட அம்மா பேரவை செயலாளா் தங்கமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி. தேவேந்திரன், வடக்கு வி.வேடி, நகரச் செயலாளா் பி.கே. சிவானந்தம், மாவட்ட மருத்துவரணி செயலாளா் என். இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவா்கள், புதிய நிா்வாகிகள், இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் நியமனம் குறித்தும், சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்க்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இதில் ஒன்றிய விவசாய அணி செயலாளா் வேங்கன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கிருஷ்ணன், மாவட்ட மருத்துவா் அணி தலைவா்
கே .ஆா்.எஸ். வேடியப்பன், இளம்பாசறை மாவட்டச் செயலாளா் முரளி பிரசாத், மாவட்ட துணைச் செயலாளா் ரேவதி, மாவட்ட மகளிா் அணி பொருளாளா் நிா்மலா, சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளா் பசீா், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளா் விஜயகுமாா், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சிக்னல் ஆறுமுகம், சக்திவேல் மற்றும் ஒன்றிய நகர நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.