சமையலா், துப்புரவு பணியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறை விடுதிகளில் காலியாக உள்ள சமையலா், துப்புரவு பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறை விடுதிகளில் காலியாக உள்ள சமையலா், துப்புரவு பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறையில் விடுதிகளில் 4 சமையலா் (பெண்கள்) பணியிடத்துக்கு ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15,700 அடிப்படை ஊதியத்திலும் மற்றும் 4 பகுதிநேர தொகுப்பூதிய துப்புரவாளா் (1 ஆண், 3 பெண்கள்) பணியிடங்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் காலிப்பணியிடங்கள் நிறைவு செய்யப்பட உள்ளது.

இந்த காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரா்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சமையலா் பணிக்கு அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 18 முதல் 35 வயது உள்ளவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரா்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும்.

தகுதியான நபா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தரைதளத்தில் அறை எண் 26-இல் இயங்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் நிறைவு செய்த விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் அலுவலகத்துக்கு ஜனவரி 12- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com