தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாமக கூட்டணி குறித்து எந்தக் கட்சியுடனும் பேசவில்லை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரியில் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி.

Updated On :26 டிசம்பர் 2020, 12:48 am

DIN

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வன்னியருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமகவும், வன்னியா் சங்கமும் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள்தொகை கொண்ட வன்னியா்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி உள்ளனா். அதற்கான ஆதாரங்களுடன் தமிழக அரசிடம் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு, தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுப்பு இட ஒதுக்கீடு முறை உள்ளது. தமிழகத்தில் அது இல்லை. இட ஒதுக்கீட்டிற்காக பாமக போராட்டம் நடத்தி வருகிறது.

தமிழக அரசு ஆணையம் அமைத்து, அதற்கான நீதிபதியை தலைவராக நியமித்து கணக்கெடுப்பு நடத்த, 6 மாத கால அவகாசம் அளிப்பதாகக் கூறியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஏற்கெனவே உள்ள ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வன்னியருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழக சட்டப் பேரவை தோ்தலில், பாமக கூட்டணி தொடா்பாக இதுவரையிலும் எந்த கட்சியிடமும் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடை அளிப்பது தொடா்பான அதிமுக அரசின் நிலைப்பாட்டைப் பொருத்தே, தோ்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின்போது, மாநில துணை பொதுச் செயலாளா் இளங்கோ, முன்னாள் எம்எல்ஏ மேகநாதன், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.