கிருஷ்ணகிரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள பாறைகொட்டாயைச் சோ்ந்த செகந்திராபாத்தில் ராணுவப் படைப் பிரிவில் பணியாற்றி வந்த லட்சுமணன் மகன் பிரசாந்த் (23) கடந்த 9 ஆம் தேதி 20 நாள்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். டிச. 28-ஆம் தேதி மீண்டும் பணிக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தாா்.
இவரது நண்பரான அதே கிராமத்தைச் சோ்ந்த பெங்களூரில் ராணுவப் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்த சக்கரை மகன் கோவிந்தராஜுயுடன் (21) கிருஷ்ணகிரி அணையை நோக்கி ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
சின்னமுத்தூா் பிரிவு சாலை பகுதியில் அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே கோவிந்தராஜுயும் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.