தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது தீடீரென தீப்பற்றி எரிந்த கார்: உயிர்தப்பிய தம்பதி!

வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்படித்து எரிந்தது குறித்து...

News image
வேலூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்படித்து எரியும் காரின் தீயை அணைக்க அரை மணி நேரத்திற்கு மேலாக போராடும் தீயணைப்பு வீரர்கள். - டிஎன்எஸ்
Updated On :18 மார்ச் 2026, 3:59 am

தினமணி செய்திச் சேவை

வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்படித்து எரிந்ததில் நல்வாய்ப்பாக காரில் இருந்த தம்பதியினர் உயிர்தப்பினர். தகவறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (33). டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவியுடன் சாப்பிடுவதற்காக வேலூர் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே உள்ள காமராஜர் சிலை பகுதியை கார் கடக்கும் போது காரின் முன் பகுதியில் புகை எழுந்த நிலையில், திடீரென காரின் முன் பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.

இதையடுத்து செய்வதறியாது தவித்த தமீம் அன்சாரி காரை சாலையிலேயே விட்டுவிட்டு நல்வாய்ப்பாக காரில் இருந்து மனைவியை பத்திரமாக மீட்டுள்ளார்.

இதுகுறித்து வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து காரை அப்புறப்படுத்தினர்.

மேலும், இந்த தீ விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.