தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

அதிகரிக்கும் கோடை வெய்யில்: வேலூர் மாவட்டத்தில் 101.3 டிகிரி வெப்பம் பதிவு!

வேலூர் மாவட்டத்தில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது தொடர்பாக...

News image

கோப்புப்படம் - படம்: DNS

Updated On :8 மார்ச் 2026, 8:37 pm IST

வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பாகவே வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று (மார்ச் 9) 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மேலும், பரமத்திவேலூர் 100.4, மதுரை விமான நிலையம் மற்றும் ஈரோடு 98.6, மதுரை நகரம் 97.16 என மொத்தம் 5 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் வேலூர் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். கடந்த சில நாள்களாகவே வேலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதலே சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கத் தொடங்கி விடுகின்றன.

பிப்ரவரி மாத இறுதியிலேயே வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், மார்ச் மாதமும் வெய்யிலின் அளவு ஞாயிற்றுக்கிழமை 101.3 டிகிரி ஃபாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.

வரும் நாள்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வெளியே செல்லும் போது குடை, தொப்பி, சன் கிளாஸ் அணிந்து செல்லவும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்கவும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Summary

Vellore district recorded a temperature of 101.3 degrees Fahrenheit today (March 9) as the heat wave intensified even before the summer season fully began.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.