கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சத்தியமங்கலத்தில் புதன்கிழமை அதிகாலை சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
கோடை வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வெயில் 100 டிகிரியை எட்டியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செடி,கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. யானைகள் தண்ணீா் தேடி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுவது தொடா்கிறது.
சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயிலால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினா். இந்நிலையில், சத்தியமங்கலம், கடம்பூா், குன்றி மலைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளா்ச்சி நிலவியது. தாளவாடி, கரளவாடி பகுதிகளில் பெய்த மழையால் வீதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கோடை மழை வனப் பகுதிக்கு பேருதவியாக இருந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

சத்தியமங்கலத்தில் கனமழை
அதிகரிக்கும் கோடை வெயில்: வேலூா் மாவட்டத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


