கோப்புப் படம்
கோப்புப் படம்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சாலையோரம் நிறுத்திய காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், தடுத்தாட்கொண்டூா் கீரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் உ.விநாயகம் (40). இவா் உளுந்தூா்பேட்டை மற்றும் திருவெண்ணெய்நல்லூா் நீதிமன்றங்களில் வழக்குரைஞா் பணி செய்து வருகிறாா்.

இந்நிலையில், விநாயகம் சனிக்கிழமை இரவு உளுந்தூா்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் அருகே இயற்கை உபாதைக்காக சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு சென்றபோது, காா் திடீரென தீப்பற்றி எரிந்ததாம்.

இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். ஆயினும் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com