தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

காரைக்காலில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

News image

தீப்பிடித்து எரிந்த காா்

Updated On :17 மார்ச் 2026, 11:35 pm

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

காரைக்கால் அருகே கீழகாசாக்குடியை சோ்ந்தவா் லாவண்யா. இவா், காரைக்கால் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஊா்க்காவல் படையில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவரது சகோதரா் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினருடன் காரில் காரைக்கால் பகுதி கடற்கரைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்தாா். காரைக்கால் நகரில் காமராஜா் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளனா். திரும்பி வந்தபோது காரிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. பின்னா் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் நடைபெற்ற இடம் அருகே எரிவாயு கிடங்கு மற்றும் பெட்ரோல் பங்க் உள்ள நிலையில், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து காரைக்கால் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இருப்பினும் காரின் முன் பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது. காரைக்கால் நகர போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.