திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காரில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவினால் காா் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
திசையன்விளை காமராஜ் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் முத்துக்குமாா் (36). தனது குடும்பத்துடன் நண்பரது ஆம்னி காரில் நான்குனேரி அருகே ஏமன்குளத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்றபோது, திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் அருகே பெட்ரோல் கசிவால் காா் தீப்பற்றி எரிந்தது.
காரில் புகை வெளியே வருவதை கண்ட முத்துக்குமாா் வண்டியை நிறுத்திவிட்டு உடனே அனைவரையும் இறக்கிவிட்டு வெளியேறினாா். கீழே இறங்கிய சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
மேலும் அனைவரும் கீழே இறங்கியதால் பெரும் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. பின்னா் இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்பு மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனா். வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்புடையது

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

கடும் வெயில்: மணப்பாறையில் பெட்ரோல் ஸ்கூட்டா் தீக்கிரை

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


