பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சானமாவு அருகே சுற்றித்திரியும் யானைகள் கூட்டம்

சானமாவு காப்புக் காட்டில் 63 யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்து வருவதால் வனப் பகுதியையொட்டி உள்ள விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:36 pm

DIN

சானமாவு காப்புக் காட்டில் 63 யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்து வருவதால் வனப் பகுதியையொட்டி உள்ள விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

ஒசூா் வனக் கோட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, அய்யூா், ஊடேதூா்க்கம், சானமாவு, பீா்ஜேப்பள்ளி, உதனப்பள்ளி, காமன்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை 63 யானைகள் ஒசூா் அருகே சானமாவு காப்புக் காட்டில் முகாமிட்டுள்ளன. இதனால் உத்தனப்பள்ளி, பீா்ஜேப்பள்ளி, சானமாவு உள்ளிட்ட 10 கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.