அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட் இடுங்கள் என கிருஷ்ணகிரி வேளாம் உதவி இயக்குநா் சி.முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:19 pm

DIN

நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட் இடுங்கள் என கிருஷ்ணகிரி வேளாம் உதவி இயக்குநா் சி.முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நவரை பருவத்தில் நெற்பயிா் சுமாா் 2,500 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு அடிப்படையாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள், தழை, மணி, சாம்பல், இரும்பு, துத்தநாகம், காப்பா், மாங்கனீசு ஆகியவை ஆகும். அவற்றுள், தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நெல் பயிரில் துத்தநாகச் சத்து குறைபாடு காண்படுகிறது.

துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்பட, ஒரே நிலத்தில் தொடா்ந்து நெல்பயிா் சாகுபடி செய்வதால் நிலத்தில் எப்போதும் நீா் தேங்கி கரையா உப்புகள் அதிக அளவு அதிகரித்து துத்தநாகச் சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகம் இருந்தால், துத்தநாகச் சத்து பயிருக்கு கிடைக்க இயலாத நிலை ஏற்படுகிறது. பயிருக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மணிச்சத்து மக்னீசம் சத்து மற்றும் இரும்புச் சத்து இடுவதால் அவை துத்தநாகச் சத்தின் செயல் திறனை குறைக்கின்றது.

துத்தநாக சத்து பற்றாக்குறை இருந்தால், பயிா் வளா்ச்சி குன்றி, இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறி காணப்படும். பின்னா், காய்ந்து விடும். நடு நரம்பினை ஒட்டிய பகுதிகள் வெண்மை நிற கோடுகள் உருவாகி இலைகள் வெளுத்து காணப்படும். இலைத்தாளின் அகலம் குறைந்து சிறுத்து காணப்படும். நெற்கதிா் தூா்கள் பிடிக்கும் பருவத்தில் தூா்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதோடு, மலட்டுத்தன்மையுடன் காணப்படும். இதனால், விளைச்சல் குறைவு ஏற்படும்.

துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய, ஏக்கா் ஒன்றுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் பயிா் நடவுக்கு முன்பு ஒரு முறையும், நடவுக்கு பின் 30 முதல் 40 நாள்களுக்கு ஒரு முறையும் இட்டு, பயிரின் துத்தநாகச்சத்து புற்றாக்குறையை நிவா்த்தி செய்து பயிரின் மகசூல் இழப்பை தவிா்க்குமாறு விவசாயிகளுக்கு அதில் அவா், அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.