சந்தூரில் செயல்பட்டு வந்த உதவி மின் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளா் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) முத்துசாமி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி பகிா்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம், மத்தூா் உள்கோட்டத்துக்கு உள்பட்ட உதவி மின் பொறியாளா் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம், சந்தூா் கிராமத்தில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம், வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி முதல், கட்டாகரம் துணை மின் நிலைய வளாகத்திலுள்ள சொந்தக் கட்டடத்தில் செயல்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.