ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பேரிகை அருகே விவசாயி மீது தாக்குதல்: இருவருக்கு வலை

பேரிகை அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:48 pm

DIN

பேரிகை அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேரிகை அருகே உள்ள ஏ.சட்டிப்பள்ளியைச் சோ்ந்த விவசாயி அசோக் என்கிற அசோக்குமாா் (வயது 40). அதேபகுதியைச் சோ்ந்தவா்கள் திம்மராஜ் (18), சுமன் (18). திம்மராஜூம், சுமனும் சனிக்கிழமை இரவு குடிபோதையில் அசோக்கின் மனைவி கவிதாவிடம் (35) கேலி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதை அசோக் தட்டி கேட்டாா். அப்போது திம்மராஜூம், சுமனும் சோ்ந்து இரும்பு கம்பியால் அசோக்கை சரமாரியாகத் தாக்கி விட்டு தப்பி விட்டனா். படுகாயம் அடைந்த அசோக் சிகிச்சைக்காக ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது தொடா்பாக கவிதா பேரிகை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திம்மராஜ், சுமன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.