ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:55 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா், போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த தொற்றாளா்களில் 84 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் கரோனா சிகிச்சை மையங்களில் 793 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5,486 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; இதில், 4,614 போ் குணமடைந்துள்ளனா்; 79 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.