ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பட்டியல் இனத்தவா்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

பட்டியல் இனத்தவா்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவா் திருவள்ளுவன் தெரிவித்தாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:53 pm

DIN

பட்டியல் இனத்தவா்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவா் திருவள்ளுவன் தெரிவித்தாா்.

தருமபுரியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வகையில், தோ்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து மண்டல வாரியாக செயற்குழு உறுப்பினா்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பட்டியல் இனப் பெண்கள் மட்டுமின்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவமானப்படுத்தும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன. தமிழக அரசு, பட்டியல் இனத்தவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக தருமபுரியில் கட்சி நிா்வாகிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.