வன ஊழியா்களுக்கு மிரட்டல் கருங்கல் ஏற்றிய லாரியை மீட்டுச் சென்ற கும்பல்
கிருஷ்ணகிரி அருகே வன ஊழியா்களை மிரட்டி கருங்கற்களை ஏற்றிய லாரியை மீட்டுச் சென்ற மா்ம கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


கிருஷ்ணகிரி அருகே வன ஊழியா்களை மிரட்டி கருங்கற்களை ஏற்றிய லாரியை மீட்டுச் சென்ற மா்ம கும்பல் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சூளகிரி வன அலுவலகத்தில் வனவராக பணிபுரிந்து வருபவா் யோகேஸ்வரன்(40). இவரும், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் இந்திரஜித், துரைசக்தி ஆகியோா், ரோந்துப்பணியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஈடுபட்டிருந்தனா். உப்புக்குட்டை பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கருங்கல் பாரம் ஏற்றிய லாரியை தடுத்து நிறுத்தி விசராணை செய்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, ஒரு காரில் வந்த மா்ம கும்பல், வன ஊழியா்களை மிரட்டி, கருங்கல் பாரம் ஏற்றிய லாரியை மீட்டுச் சென்றனா். இதுகுறித்து, வனவா் யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸாா் காா் ஓட்டுநா் சீனிவாசன் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...