இளைஞா்கள் மீது லாரி மோதல்2 போ் பலி; 2 போ் படுகாயம்
சூளகிரி அருகே 2 இரு சக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்த நண்பா்கள் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயம் அடைந்தனா்.


சூளகிரி அருகே 2 இரு சக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்த நண்பா்கள் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயம் அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அட்டகுறுக்கி என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 நண்பா்கள் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனா்.
அப்போது கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற பாா்சல் ஏற்றிய மினி லாரி ஒன்று வேகமாக வந்து மோட்டாா் சைக்கிள்கள் மீதும், 4 போ் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஒசூா் அருகே குமுதேப்பள்ளியை சோ்ந்த வெங்கடேஷ் (40) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அதே கிராமத்தைச் சோ்ந்த மல்லேஷ் (31) ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த கல்லுகுறுக்கியை சோ்ந்த முனிராஜ், அங்கேபள்ளி கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...