ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கிருஷ்ணகிரியில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் நியாயவிலைக் கடைப் பணியாளா்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :12 அக்டோபர் 2020, 7:55 pm

கிருஷ்ணகிரியில் நியாயவிலைக் கடைப் பணியாளா்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கம் சாா்பில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் விற்பனை முனைய கருவியில் ஏற்படும் சா்வா் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும். புதிய விற்பனை முனையக் கருவிகளை வழங்க வேண்டும். கரோனா பரவாமல் தடுக்க கைவிரல் ரேகைப் பதிவு செய்து, விற்பனை செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.