2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:16 pm

DIN

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்தக் கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) விஜயேந்திரன், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ.வரலாறு, பொருளாதாரம், பி.ஏ. (தமிழ் இலக்கியம்), பி.காம். பி.பி.ஏ. ஆகியப் பாடப்பிரிவுகளிலும், பி.எஸ்சி. அறிவியல் பாடப்பிரிவுகளிலும் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளதால் இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லூரியில் இதுவரை சோ்க்கை கிடைக்காத மற்றும் விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் அக். 30-ஆம் தேதிக்குள் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று, பூா்த்தி செய்து விண்ணப்பங்களை முதல்வா் அலுவலகத்தில் சமா்ப்பித்து நேரடியாகச் சோ்க்கைப் பெறலாம்.

எனவே, மாணவ, மாணவிகள், மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், 3 மாா்பளவு புகைப்படங்கள், சோ்க்கை கட்டணம் ரூ. 2,175, அனைத்து சான்றிதழ்களின் இரண்டு நகல்களுடன் கல்லூரிக்கு வரவேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.