பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு? முதல் செயல்திட்டம்!

தமிழில் உயர்கல்வியை கொண்டு வருவதற்கான முதல் செயல்திட்டம் பற்றி..

News image
பொறியியல் பாடத்திட்டம்- ANI
Updated On :16 மார்ச் 2026, 5:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தொழில்கல்வியில் பட்டம் பெற்றாலும் வேலைவாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கான திறன்களை சோதிக்கும்போது, பெரும்பகுதியினரிடம் இருந்து எதிர்மறையான முடிவுகள்தான் கிடைக்கிறது.

தொழிற்கல்வி படித்தாலும், அதில் போதிய திறன் இல்லாததால், வேலைவாய்ப்பு சந்தையில் திறன்மிக்க மனிதவளத்துக்குப் பற்றாக்குறை என்பது நீடித்துக் கொண்டே இருக்கிறது.

மொழித் தடையால் சரியான புரிதல் இல்லாமல் தொழில் கல்வியைக் கற்கும் மாணவர்களால், திறன்களை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை என்பதே பொதுவான கருத்து.

இந்த மொழிப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், தொழில்படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு வருகிறது.

ஒருவர் தன்னுடைய தாய்மொழியில் அனைத்துப் பாடங்களையும் கற்கும்போது பாடங்களை புரிந்துகொள்ள முடியும். கற்றல் திறன் அதிகரித்து, மாணவர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்த வழிவகை ஏற்படுகிறது.

முதல் செயல்திட்டம்! புதிய சொற்களை உருவாக்கலாம். தக்கசொற்கள், காலத்தை வென்று நிலைக்கும்.

பழைய சொற்களைப் புதுப்பித்தல்: இதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். பண்டைய இலக்கியங்களில் நிறைய நிறைய அழகுத் தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவற்றைத் தேடிப் புரட்டினால், ஆங்கிலக் கலைச்சொற்களுக்குத் தக்க தமிழ்க் கலைச்சொற்கள் கிட்டும். தேடவேண்டும்; பலமுறை சீர்தூக்கிஅலச வேண்டும்; தேவைப்பட்டால் பண்டிதர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்; பின்னர்பயன்படுத்தவேண்டும்.

ஆங்கிலத்தில் வெஸ்டிப்யூல்' என்றொரு சொல் உண்டு. உடற்கூறியல், கட்டடக்கலை போன்ற துறைகளில் பயன்படுகிற சொல். மற்றொரு அறைக்குத் திறக்கும் ஓரறை என்று இதனை விளக்குவார்கள் (எ சேம்பர் ஓப்பனிங் இண்டு அனதர் சேம்பர்). இதற்கான தமிழ்ச் சொல்லை எவ்வாறு உருவாக்குவது?

35, 36 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத் தகவல்களைத் தமிழில் தருகிற முயற்சிகளில், நானும் இன்னும் சிலரும் ஈடுபட்டிருந்தோம். எங்கள் குழுவின் தலைவராகப் பேராசிரியர்கதிரேசன் இருந்தார். உட்செவியில் இருக்கும் வெஸ்டிப்யூல் அங்கணம்' என்னும் சொல்லைப் பயன்படுத்தினால் என்ன என்றுபேராசிரியரைக் கேட்டேன். அடடா, நல்ல சொல்லாயிற்றே, திருநெல்வேலி பக்கத்தில் நிறைய சொல்வார்கள்' என்று சிலாகித்தார். முற்றம், வெளிவாசலை அடுத்திருக்கும் பகுதி, சமையலறைக்குள்ளிருக்கும் சர்வீஸ் ஏரியா, நீர் செல்வதற்கான தாழ்வுப்பகுதி போன்ற பல பொருள்கள் இச்சொல்லுக்கு உண்டு; வள்ளுவர் முதல் கம்பர் தொடர்ச்சியாக வள்ளலார் வரை இச்சொல்லை வெவ்வேறு தருணங்களில் பயன்கொள்கிறார்கள். ஆனாலும், ஆங்கில வெஸ்டிப்யூலுக்கு வெகு அழகாகவே பொருந்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.