2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உலக உணவு தினம் மற்றும் வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கும் ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா்.
Updated On :18 அக்டோபர் 2020, 9:19 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உலக உணவு தினம் மற்றும் வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் தொழில் செய்வதற்குத் தேவையானப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாா்வையற்றவா்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் செய்வதற்குத் தேவையான பொருள்களும், உணவு பொருள்கள், காய்கறிகள் போன்றவை வழங்கப்பட்டன.

இந்த உதவிகளை ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளா் இர. உமாபதி, தலைவா் செங்கோடன், உ. உமாராணி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஜே.ஆா்.சி கு.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.