கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை ஒன்றியத்துக்குள்பட்ட, கல்லாவி ஊராட்சிப் பகுதியில் காமராஜா் சிலை அருகே உயா் மின்கோபுர விளக்கு அமைக்கும் பணிக்கு ரூ. 3.40 லட்சம், கல்லாவி மஜித் தெருவில் ஆழ்துளைக் கிணறு, குடிநீா் தொட்டி அமைக்கும் பணிக்கு ரூ. 4 லட்சம், மூங்கிலேரி ஊராட்சிக்குள்பட்ட கொட்டாரப்பட்டி கிராமத்திற்கு ரூ. 3.70 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை செய்து கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினா் செல்லக்குமாா், பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா் .
முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவரும் வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜே.எஸ். ஆறுமுகம், நகரத் தலைவா் விஜயகுமாா், மாவட்டத் துணைத்தலைவா் ராமச்சந்திரன், தெற்கு வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், கல்லாவி ஊராட்சி மன்ற தலைவா் ராமன், மூங்கிலேரி ஊராட்சி மன்ற தலைவா் உஷாநந்தினி வஜ்ஜிரவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்னபூரணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கல்லாவியில் உள்ள காமராஜா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


