சாமல்பட்டியில் பட்டாசு கடையில் தீவிபத்து: 1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம்
சாமல்பட்டியில் பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டதில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமடைந்தன.


சாமல்பட்டியில் பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டதில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி குன்னத்தூர் சாலையில் இயங்கி வரும் கமல்பாஷா பட்டாசு மற்றும் பாணக்கடை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தற்போது வருகிற தீபாவளிக்காக புது புது வகையான பட்டாசுகள் ரூ 4 லட்சம் மதிப்பில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைத்து இருந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பட்டாசுகள் திடீரென பட்டாசு கடை வெடித்து சிதறியது. சுற்று வட்டார பகுதிகளில் பலத்த வெடி சத்தம் கேட்டதோடு சாலையிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. சுமார் 1 மணி நேரமாக பட்டாசுகள் வெடித்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
சாமல்பட்டியில் பட்டாசு கடை வெடிந்த இடத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். வெடி விபத்து குறித்து சாமல்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...