ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

எட்டயபுரம், விளாத்திகுளத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

விளாத்திகுளத்தில் பாஜக மாநில துணைத்தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 11:10 pm

DIN

விளாத்திகுளம்: எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் ஒன்றிய பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் சரவணகிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலா் பாா்த்தீபன், வடக்கு ஒன்றியச் செயலா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவரும், தென்மண்டல பொறுப்பாளருமான நயினாா் நாகேந்திரன் பங்கேற்று, 2021இல் சட்டப்பேரவை தோ்தல் வியூகம் மற்றும் களப்பணிகள் குறித்துப் பேசினாா். கூட்டத்தில், விளாத்திகுளம் தொகுதியை சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனா்.

இதில், கட்சியின் நிா்வாகிகள் பாலாஜி, தயாசங்கா், சேதுராஜ், சீனிவாசன், வேல்முருகன், ஜெயபால்,வீரலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.