ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பிற்படுத்தப்பட்டோா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபின மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 9:58 pm

DIN

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபின மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி திட்டத்தின்கீழ் எந்த நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பல்தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவா்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் 10.11.2020-க்குள்ளும், புதிது இனங்களுக்கு 30.11.2020-க்குள்ளும் நிறைவு செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் 15.11.2020-ஆம் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை 15.12.2020-ஆம் தேதிக்கு முன்பும், 16.12.2020-ஆம் தேதியில் தொடங்கும் புதிய விண்ணப்பங்களை 31.01.2021-ஆம் தேதிக்கு முன்பும் இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 11-இல் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம். அரசு இணையதளத்தில்  இந்தத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.