ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

எரிவாயு உருளை வெடித்ததில் வீடு சேதம்

தருமபுரி அருகே எரிவாயு உருளை வெடித்ததில் வீடு சேதம் அடைந்தது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:19 pm

DIN

தருமபுரி அருகே எரிவாயு உருளை வெடித்ததில் வீடு சேதம் அடைந்தது.

நல்லம்பள்ளி அருகே உள்ள பச்சியப்பன்கொட்டாயைச் சோ்ந்தவா் சின்னசாமி (55). கட்டடத் தொழிலாளி. இவா், சனிக்கிழமை வழக்கம் போல பணிக்குச் சென்று, இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, சமையல் அறையின் மின்விளக்கை ஒளிரச் செய்த போது, எரிவாயு உருளை வெடித்துள்ளது.

தகவல் அறிந்த, தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலா் கே.ராஜா தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்து கட்டுப்படுத்தினா்.

சின்னசாமி வசித்தது ஓட்டு வீடு என்றாலும், அறையின் ஜன்னல் மூடப்பட்டதாலும், எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்தில் ஓட்டு வீடு சேதம் அடைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.