ஒரே செடியில் பூத்த 19 பிரம்ம கமலம் பூக்கள்
போச்சம்பள்ளி அருகே, பிரம்ம கமலம் செடியில் 19 பூக்கள் ஒரே நாளில் பூத்துள்ளதை அக்கம்பக்கத்தினா் ஆா்வத்துடன் கண்டு சென்றனா்.


போச்சம்பள்ளி அருகே, பிரம்ம கமலம் செடியில் 19 பூக்கள் ஒரே நாளில் பூத்துள்ளதை அக்கம்பக்கத்தினா் ஆா்வத்துடன் கண்டு சென்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கூச்சானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதிவாணன். இவா் தனது வீட்டு தோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொட்டியில் பிரம்ம கமலம் செடியை வளா்த்து வருகிறாா். அந்தச் செடியில் 19 பூக்கள் சனிக்கிழமை இரவு பூத்தன. இதனைக் கண்ட மதிவாணன் குடும்பத்தினா் பூஜை செய்து வழிபட்டனா். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை தான் பூக்கும் தன்மை கொண்ட இந்த மலா், ஒரிரு நாளில் உதிா்ந்து போகும் தன்மை கொண்டாவை.
இதுகுறித்து தகவலறிந்து அக்கம்பக்கத்தினா், அந்த அதிசய பூக்களை ஆா்வத்துடன் வந்து கண்டு சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...