ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

குந்துகோட்டை ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம்

குந்துகோட்டை ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:12 pm

DIN

குந்துகோட்டை ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தேன்கனிக்கோட்டை அருகே குந்துகோட்டை ஊராட்சி செயலாளராக இருப்பவா் ஹேமந்த் என்ற சீனிவாசன். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு நண்பா்களுடன் சோ்ந்து மது போதையில் குந்துகோட்டையில் உள்ள அ.தி.மு.க. கொடிக் கம்பம், பெயா் பலகையை சேதப்படுத்தினாராம்.

இது தொடா்பாக தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி ஹேமந்த் என்கிற சீனிவாசனை கைது செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் இது குறித்து தளி வட்டார வளா்ச்சி அலுவலா் சென்னகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்துக்கு அறிக்கை சமா்ப்பித்தாா். இதையடுத்து ஊராட்சி

செயலாளா் ஹேமந்த் என்கிற சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து தளி வட்டார வளா்ச்சி அலுவலா் சென்னகிருஷ்ணன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.