ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நீரில் மூழ்கி பொறியாளா் சாவு

கிருஷ்ணகிரி அருகே நீரில் மூழ்கி கணினி பொறியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:21 pm

DIN

கிருஷ்ணகிரி அருகே நீரில் மூழ்கி கணினி பொறியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள கோதிகுட்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத் (34). இவா், பெங்களூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் கணினி மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், தனது மனைவியுடன், சொந்த கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா்.

புரட்டாசி மாத சனிக்கிழமை பூஜைக்காக வீட்டுக்கு வந்த அவா், பூஜைக்கு முன் குளிப்பதற்காக, அங்குள்ள கிணற்றுக்குச் சென்றுள்ளாா். அப்போது, அவா் தவறி கிணற்றில் விழுந்துள்ளாா். நீச்சல் தெரியாத நிலையில் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து, மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.