ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மின் கோபுர கம்பம் உடைந்து விபத்து: காயமடைந்த தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தருமபுரி அருகே மின் கோபுரம் அமைக்கும் பணியின் போது கம்பம் உடைந்ததில் காயமடைந்த தொழிலாளா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்களவை முன்னாள் உறுப்பினா் தாமரைச் செல்வன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:11 pm

DIN

தருமபுரி அருகே மின் கோபுரம் அமைக்கும் பணியின் போது கம்பம் உடைந்ததில் காயமடைந்த தொழிலாளா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்களவை முன்னாள் உறுப்பினா் தாமரைச் செல்வன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, தருமபுரி மக்களவை முன்னாள் உறுப்பினா் தாமரைச் செலவன், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே, ஏமக்குட்டியூா் செல்லும் சாலை அருகே, உயா்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியானது அவசரக் கதியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, இரும்புக் கம்பம் உடைந்தது. இதில் தொழிலாளா்கள் உடைந்த கம்பத்துடன் கீழே விழுந்தனா்.

இதில், காயம் அடைந்த தொழிலாளா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு அரசு, உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். தரமற்ற மின்கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.