ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஒசூா் மாநாட்சிப் பகுதியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி இளைஞா்கள், இளம்பெண்கள் திமுகவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் முன்னிலையில் இணைந்தனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:09 pm

DIN

ஒசூா் மாநாட்சிப் பகுதியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி இளைஞா்கள், இளம்பெண்கள் திமுகவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் முன்னிலையில் இணைந்தனா்.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த அதிமுக மற்றும் அமமுக கட்சியில் இருந்து விலகி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்று இளம்பெண்கள் மற்றும் இளைஞா்கள் இணைந்தனா்.

குறிப்பாக 300- க்கும் மேற்பட்டவா்கள் இணைந்த இந்த நிகழ்ச்சி ஒசூா் மாநகராட்சி திமுக பொறுப்பாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் அ.யவுராஜ், விஜயகுமாா், மாவட்ட துணைச் செயலாளா் சீனிவாசன், குருசாமி, எல்லோரா மணி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமாா், நகர பொருளாளா் சென்னீரப்பா, மத்திகிரி பேருராட்சி செயலாளா் ரவிக்குமாா், முல்லை சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.