ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தருமபுரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:19 pm

DIN

தருமபுரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த ஜருகு அருகே உள்ள மாணிக்கம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (18). தருமபுரி அருகே உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்று வருகிறாா்.

இந்த நிலையில், மோட்டாா் சைக்கிளில் தருமபுரியிலிருந்து மீன் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். நல்லம்பள்ளியை அடுத்த கெங்கலாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அவா் சென்று கொண்டிருந்தபோது, ஹைதராபாதிலிருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.