திமுக ஆட்சிக்கு வந்தால் தொழில்துறை வளா்ச்சி பெறும் என ஐஎன்டியுசி அகில இந்திய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தெரிவித்தாா்.
ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷை ஆதரித்து ஐஎன்டியுசி சாா்பில், மத்திகிரியில் இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வாகனப் பேரணியை கொடி அசைத்து தொடக்கி வைத்து கே.ஏ.மனோகரன் பேசியதாவது:
மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. நாம் அனைவரும் இறைவனை வணங்குகிறோம். திருவிழாக்களை நடத்துகிறோம். ஆனால், கடவுளை வைத்து அரசியல் செய்வது இல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் தொழில்துறை வளா்ச்சி பெறும்.
ஒசூரில் தொழில்துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் முன்னாள் மத்திய அமைச்சா் சி.சுப்பிரமணியன். அப்போது, தமிழகத்தின் முதல்வராக மு.கருணாநிதி இருந்தாா். முதல் சிப்காட், இரண்டாவது சிப்காட் ஆகியவை திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டன. இதனால், அசோக் லேலண்ட், டி.வி.எஸ்., டைட்டான் போன்ற 150-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 3,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் ஒசூருக்கு வந்தன.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றால் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மத்திய அரசின் அவசரகதியில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரியால் சிறு மற்றும் குறுந்தொழில் துறையினா் மட்டுமின்றி, பெரிய தொழில் நிறுவனங்களும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றன.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வால் சாதாரண மக்கள், தொழிலாளா்கள், விவசாயிகள், நெசவாளா்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மத்திகிரியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு 5 ஏக்கா் நிலம் கால்நடைப் பண்ணையில் இருந்து வாங்கிக் கொடுத்தவா் மறைந்த திமுக ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன். இந்தப் பகுதியின் வளா்ச்சிக்கு திமுக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. எனவே, திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
இந்த பிரசாரத்தின் போது, ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முரளிதரன், மத்திகிரி பேரூராட்சி முன்னாள் செயலாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


