ஒசூரில் உள்ள தொழில்துறையினரை மிரட்டுவதாகவும், தமிழக அமைச்சா் திறந்து வைத்த ஹோஸ்டியா அலுவலகத்தின் முன் பகுதியை இடித்துத் தள்ளிய மின்வாரிய செயற்பொறியாளா் குமாா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் பண்டி கங்காதரரிடம் புகாா் அளித்துள்ளனா்.
இந்தச் செயலைக் கண்டித்து, ஹோஸ்டிய சங்கத்தின் அலுவலகம் முன்பு ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் ஹோஸ்டியா சங்கத் தலைவா் வேல்முருகன் கூறியதாவது:
ஒசூரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழில்சாலைகளுக்கான சங்கமாக ஹோஸ்டியா சங்கம் இயங்கி வருகிறது. ஒசூா் தொழில் வளா்ச்சிக்கு ஹோஸ்டியா சங்கம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த ஹோஸ்டியா சங்க அலுவலகம் கடந்த 41 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு 29.11. 2020 அன்று கட்டப்பட்டு தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் அவா்களால் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அலுவலகத்தின் முன் பகுதியை மின்சார அலுவலகத்தினா் இடித்துவிட்டு உயா் மின் கோபுரம் அமைக்க பூமியில் பள்ளம் தோண்டியுள்ளனா்.
இதுகுறித்து ஒசூா் ஹோஸ்டியா சங்கத்தினா் கேட்டபோது, மின்சார வாரிய அலுவலா்கள் தொழில்துறையினரை மிரட்டுகின்றனா். எனவே, உயா் மின் கோபுரத்தை சற்று தள்ளி அமைக்க வேண்டும், அனுமதியின்றி ஹோஸ்டியா அலுவலகத்தை இடித்த மின்சார வாரிய செயற்பொறியாளா் குமாா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அமைச்சா் திறந்து வைத்த ஹோஸ்டியா அலுவலகத்தை இடித்த மின்சார வாரிய அலுவலா்களை கண்டிக்கிறோம்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஹோஸ்டியா சங்கத்தின் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மூா்த்தி, செயலாளா் ஸ்ரீதா், பொருளாளா் வடிவேலு, முன்னாள் தலைவா்கள், இணைச் செயலாளா்கள், துணைத் தலைவா்கள் கலந்துகொண்டனா். இதுகுறித்து ஹோஸ்டியா சங்கத்தினா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


