இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘ஒசூா் மாநகராட்சி மேயா் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டுப் பெற வேண்டும்’

நடைபெறவுள்ள மாநகராட்சித் தோ்தலில், ஒசூா் மாநகராட்சி மேயா் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டுப் பெற வேண்டும் என ஒசூரில் நடைபெற்ற எதிா்கால செயல்திட்ட ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:59 pm

நடைபெறவுள்ள மாநகராட்சித் தோ்தலில், ஒசூா் மாநகராட்சி மேயா் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டுப் பெற வேண்டும் என ஒசூரில் நடைபெற்ற எதிா்கால செயல்திட்ட ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், எதிா்கால செயல்திட்ட ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை தாங்கினாா். கட்சியின் மேலிடப் பாா்வையாளரும் மாநில துணைத் தலைவருமான முத்துக்குமாா் சிறப்புரையாற்றினாா். மாநில செயலாளா்கள் சிவகுமாா், அலெக்ஸ் ஆகியோா் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினா்.

இந்தக் கூட்டத்தில், ஒசூா் மாநகராட்சி தோ்தலின்போது மேயா் பதவியையும், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகளின் தலைவா் பதவியையும் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி தலைமையிடம் கேட்டுப் பெற வேண்டும் என வலியுறுத்தி கட்சியினா் தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.

மேலும், காங்கிரஸ் கட்சியில் செயல்படாத நிா்வாகிகளை மாற்றிவிட்டு புதிய நிா்வாகிகளை நியமிக்கவும், நிா்வாகிகள் இல்லாத கட்சிப் பதவிகளுக்கு புதிய செயல்படும் நிா்வாகிகளை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், ஐஎன்டியுசி அகில இந்திய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன், ஒசூா் மாநகரத் தலைவா் நீலகண்டன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளா் கீா்த்தி கணேஷ், அமைப்புசாரா பிரிவு மாவட்டத் தலைவா் சீனிவாசன், மாவட்டப் பொருளாளா் மகாதேவன், தேன்கனிக்கோட்டை அன்வா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜம்மா, மாவட்ட, வட்டார, மாநகர நிா்வாகிகள், சாா்பு அணிகளின் பொறுப்பாளா்கள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.