தேன்கனிக்கோட்டை அருகே மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வெள்ளிக்கிழமை வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அளேசிபம் பகுதியைச் சோ்ந்த முனியப்பா (28), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு புவனேஸ்வரி மா்மமான முறையில் உயிரிழந்தாா். மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்த முனியப்பாவிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து புவனேஸ்வரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து முனியப்பாவை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி லதா தீா்ப்பை வெள்ளிக்கிழமை வாசித்தாா். அதில், மனைவியைக் கொன்ற முனியப்பாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சி.கலையரசி ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

