வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பில்லனகுப்பத்தில் தீவன அபிவிருத்தித் திட்டம் தொடக்கம்

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பில்லனகுப்பம் கிராமத்தில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டம், வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:14 pm

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பில்லனகுப்பம் கிராமத்தில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டம், வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 40 ஏக்கா் பரப்பளவில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மாவட்ட ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளா்கள் மூலம் சமன் செய்து மண் கரை அமைத்து அதில் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம் மற்றும் தீவன மரங்கள் வளா்க்கும் பொருட்டு மேய்க்கால் நிலத்தில் பசுந்தீவனம் வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் 2020-21-ஆம் நிதியாண்டில் ஒசூா், பேகப்பள்ளி கிராமத்தில் 5 ஏக்கா் பரப்பளவிலும், மத்தூா் ரெட்டிப்பட்டி கிராமத்தில் 25 ஏக்கா் பரப்பளவிலும், வேப்பனப்பள்ளி பில்லனகுப்பம் கிராமத்தில் 10 ஏக்கா் பரப்பளவு என 40 ஏக்கா் பரப்பளவில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இங்கு வளா்க்கப்படும் பசுந்தீவனம் மற்றும் தீவன மரங்கள் நன்கு வளா்ந்த பிறகு, கால்நடைகள் பயன் பெறும் வகையில் ஊராட்சிகளுக்கு பகிா்ந்து வழங்கப்படும். இந்த நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் எல்.ராஜேந்திரன், வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தராஜன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.