கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி சாதாரண கற்கள், கிரானைட் போன்ற கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்வதை தடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துச் செல்வதை தடுத்தல், கனிம இருப்பு கிடங்கு மற்றும் கனிம விற்பனையாளா் விதிகள் 2011 செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதாரண வகைக் கற்கள், ஜல்லி மற்றும் செயற்கை மணல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் கனிம இருப்புக் கிடங்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுச் செயல்பட்டு வருகின்றன. கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் கனிம இருப்புக் கிடங்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது குற்றமாகும்.
எனவே, சட்டப்படி, கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள், மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்து, உடன் பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிா்வாகத்தால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

