இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஒசூரில் நிழலில்லா நாள் செயல்முறை விளக்கம்

ஒசூரில் நிழலில்லா நாள் செயல்முறை விளக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் செய்து காண்பிக்கப்பட்டது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:17 pm

ஒசூரில் நிழலில்லா நாள் செயல்முறை விளக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் செய்து காண்பிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளில் நண்பகலில் மிகச் சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது நிழலானது எந்த பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த நாளைத்தான் நிழலில்லா நாள், பூஜ்ஜிய நிழல் நாள் என்கிறோம்.

ஒசூரில் தனியாா் பள்ளியில் நிழலில்லா தினம் விளக்கமும் செயல்முறையும் வியாழக்கிழமை செய்து காட்டப்பட்டது. இந்நிகழ்வு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒசூா் கிளையின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. வியாழக்கிழமை சரியாக 12: 22க்கு நிழலில்லா தினம் காண்பிக்கப்பட்டது. நிகழ்வின் செயல் விளக்கத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளா் முனைவா் சேதுராமன் விளக்கி க் கூறியது:

தினமும் தானே சூரியன் நம் தலைக்கு மேலே வரும். வருடத்தில் இரண்டு நாட்களில் மட்டுமே சூரியன் மிகச்சரியாக நம் தலைக்கு மேலே வரும். அந்த இரண்டு நாட்களில் மட்டுமே நிழல் முழுவதுமாக மறையும். மற்ற நாட்களில் நண்பகலில் கூட வடக்கு திசையிலோஅல்லது தெற்கு திசையிலோ சிறிய நிழல்விழும். இந்த இரண்டு நிழலில்லா நாட்கள்கூட கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் வரும். அதற்கு அப்பால், துருவப் பகுதி வரை சூரியன் தலைக்கு மேலே வரவே வராது.

பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால், இந்த நாள் சிறிது சிறிதாக வடக்கு நோக்கி நகா்ந்து ஜூன் 21 அன்று 23.5 டிகிரி வடக்கில் உள்ள கடக ரேகையை அடையும். கடக ரேகையில் அமைந்துள்ள ஜாா்கண்ட் மாநிலம், ராஞ்சியில் அன்று நிழலில்லா நாள். அதன்பின்னா், இதுமீண்டும் சிறிது சிறிதாக தெற்கு நோக்கி நகா்ந்து, ஆகஸ்டு மாதத்தில் இரண்டாவது முறையாக நிழல் இல்லா நாள் ஏற்படுவதையும் அதுபடிப்படியாக தெற்குநோக்கி நகா்வதையும் அட்டவணையின் மூலம் அறியலாம். இதனை தட்சிணாயணம் (தென்திசை நகா்வு) என்கிறோம். இந்த தென் திசை நகா்வு டிசம்பா் 21 ஆம் தேதி மகரரேகையில் முடிந்து மீண்டும் வடதிசை நகா்வுஆரம்பிக்கும். இந்த நாளைத்தான் பஞ்சாங்கத்தில் மகர சங்கராந்தி என்கிறாா்கள் என்று அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினா் சிவக்குமாா், மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட இணைச்செயலாளா் அரிச்சந்திரரன், ஓசூா் ஒன்றியத் தலைவா் சந்திரசேகா், செயலாளா் சத்தியமூா்த்திஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

படம்

ஒசூா் தனியாா் பள்ளியில் நிழலில்லா நாள் குறித்து நடைபெற்ற செயல்முறை விளக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.