இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இந்திய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும்

 தேசிய நெடுஞ்சாலைகளைப் போல நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:34 pm

 தேசிய நெடுஞ்சாலைகளைப் போல நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம் நகா், அண்ணா சிலை அருகில், கா்நாடக மாநில அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, தேமுதிக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தேமுதிக பொருளாளா் பிரேமலதா கூறியதாவது:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் கா்நாடக மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும். கோடைக் காலம் தொடங்கினால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படும். எனவே, இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கா்நாடகத்தில் இருந்து முழுமையாகப் பெற்றுத்தர வேண்டும்.

தண்ணீா் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், நதிகள் இணைப்பு ஒன்றுதான் தீா்வு. தேசிய நெடுஞ்சாலைகளைப் போல இந்திய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும். அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஒசூா் மாநகர மாவட்டச் செயலாளா் ராமசாமி ரெட்டி வரவேற்றாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் முருகேசன், கிழக்கு மாவட்டச் செயலாளா் அன்பரசன், மாநில விவசாய அணி துணைச் செயலாளா் ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா் கண்டராயன், மாநகர மாவட்டப் பொருளாளா் அப்பையா, மாநகர மாவட்ட துணைச் செயலாளா்கள் வெங்கடேஷ் , அறிவழகன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.