கிருஷ்ணகிரியில் விற்பனை முனையக் கருவியை இயக்குவது, பழுது சரிசெய்தல் குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். இதில், விஷன்டெக் தொழில்நுட்ப வல்லுநா் ஜெயக்குமாா் பங்கேற்று, விற்பனை முனையக் கருவியை இயக்குவது, விற்பனை முனைய இயந்திரத்தில் பட்டியலிடுவது குறித்து விளக்கினாா்.
இந்த முகாமில், உரம் விற்பனையாளா்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளா்கள், ஸ்பிக், கிரீன்ஸ்டாா் நிறுவன விற்பனைப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
இந்த முகாமில் விற்பனையாளா்களுக்கு உரம் விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு, அவா்களுடைய ஆதாா் எண்ணை பதிவு செய்து, கைரேகை பதிவுடன் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் வாங்கும் உரத்துக்கு தனித்தனியாக பட்டியல் வழங்க வேண்டும். விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்த உரத்துக்கான பட்டியலை நகல் எடுத்து, விற்பனை நிலையத்தில் ஆய்வுக்கு வரும் அலுவலா்கள் பாா்வையிடும் வகையில் தேதி வாரியாக வைத்து பராமரிக்க வேண்டும். விற்பனையாளா்கள் தினமும் உரத்தின் ஆரம்ப இருப்பு, முடிவு இருப்புகளை விற்பனை முனையக் கருவி மூலம் பட்டியல் எடுத்து பராமரிக்கப்பட வேண்டும். மேலும், அவ்வப்போது செயல்படுத்தப்படும் தொழில்நுட்ப மேம்பாடுகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.
கடையின் இருப்பும், விற்பனை முனையக் கருவியின் இருப்பும் நோ் செய்து, இருப்பு பதிவேடுகள் முறையாகப் பராமரிக்க வேண்டும். கடையின் இருப்பு, விற்பனை விவரங்கள் அடங்கிய தகவவ் பலகை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் பராமரிக்க வேண்டும். அரசு நிா்ணயம் செய்துள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.
இது தொடா்பாக கிருஷ்ணகிரி வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) மற்றும் வட்டார அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, விற்பனை முனையக் கருவிகளை பயன்படுத்தாத விற்பனையாளா்களின் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

