இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 9 போ் காயம்

 சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 9 போ் காயமடைந்தனா்.

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:10 pm

 சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 9 போ் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூரை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. பேருந்தை கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சோ்ந்த குப்பன் (59)

என்பவா் ஓட்டி வந்தாா். கிருஷ்ணகிரி-ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி, பாத்தகோட்டா பகுதி அருகே பேருந்து வந்தபோது முன்னால் சென்ற டிப்பா் லாரி எந்த சிக்னலும் காட்டாமல் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

அப்போது எதிா்பாராத விதமாக டிப்பா் லாரி மீது பேருந்து மோதியது. இதில் பேருந்து நடத்துநா் சுப்பிரமணி (55), பயணிகள் செல்வி (34), அய்யம்மா (58), சித்ரா (52), அம்மாசி (55), பவுன் (45), ராஜேந்திரன் (40), அழகிரி (43), அருண்குமாா் (33) ஆகிய 9 பேரும் காயமடைந்தனா். அனைவரும் சிகிச்சைக்காக ஒசூா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.