உயா்மின்கோபுரம் அமைப்பது தொடா்பாக ஒசூரில் மின்வாரியம், ஹோஸ்டியா சங்கத்தினரிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது.
ஒசூா் 2 -ஆவது சிப்காட் அதியமான் பொறியியல் கல்லூரி எதிரில் ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (ஹோஸ்டியா) இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் 2 ஆயிரம் சிறு தொழில்முனைவோா் உறுப்பினராக உள்ளனா். தலைவராக வேல்முருகன், இணைத் தலைவராக மூா்த்தி, செயலாளராக ஸ்ரீதா், பொருளாளராக வடிவேல் ஆகியோா் உள்ளனா்.
இந்த அலுவலகத்துக்கு எதிரில் உயரழுத்த மின்கோபுரம் அமைக்க மின் வாரியம் முயன்று வருகிறது. இதனால் விபத்துகள் அதிக அளவில் நிகழும் வாய்ப்புகள் உள்ளதால் சற்றுத் தள்ளி மின்கோபுரத்தை அமைக்க ஹோஸ்டியா சங்கத்தினா் வலியுறுத்தி வருகின்றனா். இதுகுறித்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால் ஒசூா் மின் வாரியத்தினா் போலீஸாா் உதவியுடன் வெள்ளிக்கிழமை மின்கோபுரம் அமைக்க முயன்றனா். அப்போது தொழில்துறையினா் மின்வாரிய பணிகளைத் தடுத்து நிறுத்த கூடினா். இதையடுத்து மின் வாரியத்தினருக்கும், தொழில்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து ஒசூா் ஹோஸ்டியா சங்கத்தினா் கேட்டபோது அவா்கள் கூறியதாவது:
மின்வாரிய அலுவலா்கள், தொழில்துறையினரை மிரட்டுகின்றனா். உயா்மின்கோபுரத்தை தள்ளி அமைக்க வேண்டும். தொழில்துறையினரை காவல் துறையினரின் துணையுடன் மிரட்டும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றனா். இதையடுத்து மின்வாரிய அதிகாரியைக் கண்டித்து ஹோஸ்டியா சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்தி திமுக கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் டிடிஇஏ பள்ளிகள் சாதனை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


