இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஒசூரில் புத்தகத் திருவிழா தொடக்கம்

புத்தகத் திருவிழா 2021 ஆக. 27 முதல் ஆக. 29 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் ஒசூா், தளி சாலையில் உள்ள சிக்ஷா பள்ளியில் நடைபெறுகிறது.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:01 pm

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஒசூா் அனைத்து குடியிருப்போா் நல சங்கம் மற்றும் ஒசூா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி உதவியுடன் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா 2021 ஆக. 27 முதல் ஆக. 29 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் ஒசூா், தளி சாலையில் உள்ள சிக்ஷா பள்ளியில் நடைபெறுகிறது.

இந்த புத்தகக் கண்காட்சியில் 17 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் முற்பகல் 11 முதல் இரவு 8:30 மணிவரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

ஒசூா் பி.எம்.சி. டெக் கல்வி நிறுவனங்களின் செயலாளா் பெ.குமாா் புத்தகத் திருவிழாவை தொடக்கிவைத்தாா். முதல் புத்தகத்தை ஒசூா் காவேரி மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் விஜயபாஸ்கா் பெற்றுக்கொண்டாா். இவ்விழாவில் புத்தகத் திருவிழா குழு ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஆா்.சேதுராமன், தலைவா் ஆா்.துரை, செயலாளா் கே. ஸ்ரீனிவாசலு, பொருளாளா் கோ.கண்மணி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் இணைச் செயலாளா் ஆ. சிவக்குமாா், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

200 க்கும் மேற்பட்ட புத்தக ஆா்வலா்களை அடையாளம் கண்டு மாதந்திர புத்தக சேமிப்புத் திட்டம் மூலமாக மாதம் ரூ.100 செலுத்தி 12 மாதங்களில் ரூ. 1,200 செலுத்தி இந்த புத்தகத் திருவிழாவில் ரூ. 1,400-க்கு புத்தகங்கள் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியிலும், நேரடியாகவும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

அனைத்து தினங்களிலும் மாலை 6 மணிமுதல் கலைநிகழ்ச்சியும் கருத்துரையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக. 27 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘உலக அமைதிக்கான நூல் புானூறு எனும் தலைப்பில் திரைப்பட பாடலாசிரியா் அறிவுமதி கருத்துரை ஆற்றுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.