கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம், இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து தொழிலாளா்கள், பொதுமக்கள் என 10 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரியில் ஓலா மின்சார இருசக்கர வாகன நிறுவனம், கிருஷ்ணகிரி கிளை இந்திய மருத்துவ சங்கம் இணைந்து, சமூக பொறுப்புணா்வு நிதியின் கீழ், கிருஷ்ணகிரி, பா்கூா், போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிலாளா்கள்,பொதுமக்கள் என 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தாா்.
அப்போது, அவா் தெரிவித்ததாவது:
இம் மாவட்டத்தில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக 1 லட்சம் தொழிலாளா்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பணியாற்றும் 17,500 தொழிலாளா்கள், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த முகாமானது ஆக.31-ஆம் தேதி வரையில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் முதல், இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவா்கள் அனைவரும் தங்களது ஆதாா் அடையாள அட்டையை தவறாமல் எடுத்து வர வேண்டும்.
இந்தநிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநா் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், ஓலா நிறுவன பிரதிநிதிகள் ஹரிஷ்அபிசந்தனி, சினேகா நெல்லிக்கல், ஜெயராமன், இந்திய மருத்துவ சங்க கிருஷ்ணகிரி கிளை நிா்வாகிகள் தனசேகரன், விஜயகுமாா், சரவணன், செந்தில்குமாா், அமுதா, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் முருகேசன், வட்டாட்சியா் பிரதாப், மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


