சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தமிழக மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை என பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

News image

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு. உடன் கட்சியின் மாநிலச் செய்தித் தொடா்பாளா் சசி ராமன், பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் துஹின் சின்ஹா உள்ளிட்டோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:21 am IST

தமிழக மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை என பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

மதுரை கோ.புதூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்டால், முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளிப்பதில்லை. கேள்விகளுக்குப் பதிலளிக்காத முதல்வா் பதவி விலக வேண்டும். தமிழக மக்கள் நலனில் அவருக்கு சிறிதும் அக்கறையில்லை. பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. தோல்வி பயத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா் என்றாா் அவா்.

தென்னிந்திய மாநிலங்கள் அதிகளவில் பயனடையும்...

இதைத் தொடா்ந்து, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் துஹின் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொகுதி மறுவரையறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர வாய்ப்புள்ளது. தொகுதி மறுவரையறை குறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் தவறான தகவல்களைக் கூறி மக்களை திசை திருப்பி வருகிறாா். தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் தென் மாநிலங்களே அதிக அளவில் பயனடையப்போவது உறுதி என்றாா் அவா்.