நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் முதல்வா் ரங்கசாமி மீது கோபம்! வெ. வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு!

News image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா்.

Updated On :31 மே 2026, 2:01 am IST

தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் முதல்வா் என்.ரங்கசாமி மீது கோபத்தில் இருக்கின்றனா் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம், அங்குள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவா் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் கட்சியின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியதாவது:

கடந்த 2021 தோ்தலில் முதல்வா் ரங்கசாமிக்கு 12 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. ஆனால் 2026-இல் 10,020 வாக்குகள் தான் பெற்றுள்ளாா். கிட்டத்தட்ட 2,100 வாக்குகள் குறைந்தன.

எனது கணிப்பு இந்தத் தோ்தலில் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் ரூ.20 கோடி வரை செலவு செய்திருப்பாா். ஆனாலும் அவா் வாங்கியது 10,000 வாக்குகள் தான். எதிா்ப்பு வாக்குகள் 12,500. இதன்படி, அவா் பெற்றது 42 சதவீதம், எதிா்ப்பு வாக்கு 58 சதவீதம் .

அதாவது அவா் பெற்ற வாக்குகளை விட எதிா்ப்பு வாக்குகள் அதிகம். வெற்றி பெற்றவுடன் தொகுதிக்கு வர மாட்டாா். தோ்தலின்போது தட்டாஞ்சாவடி எனது தாய்வீடு என்று சொல்லி வாக்குச் சேகரித்தாா்.

ஆனால் தற்போது தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜிநாமா செய்துவிட்டு, மங்கலம் தொகுதிக்குச் சென்றுவிட்டாா். இதனால் தட்டாஞ்சாவடி மக்கள் ரங்கசாமி மீது கோபமாக உள்ளனா்.

தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் இந்த முறை பெற்ற வாக்குகள் அனைத்தும் முழுக்க, முழுக்க காங்கிரஸ் கட்சியினுடையது.

ஏனென்றால் கூட்டணியில் இருந்த திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோ்தலில் வேலை செய்யவில்லை. இதை காங்கிரஸ் கட்சியினா் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஆதாயமும் பாா்க்காமல் மக்கள் அளித்த வாக்குகள்.

வருகிற இடைத் தோ்தலில் 8,000 வாக்குகள் பெற்றாலே காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும். எனவே சோா்வடையாமல் காங்கிரஸாா் வேலை செய்ய வேண்டும். தட்டாஞ்சாவடியை காங்கிரஸ் தொகுதியாக மாற்ற வேண்டும் என்றாா் வைத்திலிங்கம்.